|
Home
பாகம் :
3/5
நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் உண்மையாளர்தான் என்பதற்கான அடுக்கடுக்கான
சான்றுகள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையாளர் என்பதற்கும்,
அவர்கள் இறைவனிடத்திலிருந்து இறைச்செய்தி என அறிவித்தவைகள் அனைத்தும்
உண்மைதான் என்பதற்கும்,
அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர்தான் என்பதற்கும் அவர்கள் எது
இறைச்செய்தி என்று சொன்னார்களோ அந்தக் குர்ஆனே
1400
ஆண்டு காலமாக மாபெரும் சான்றாக இருக்கின்றது.
ஒருவர் இவ்வுலகில் எத்தகைய அறிவுஜீவியாக இருந்தாலும் அல்லது அவர்
விஞ்ஞானியாகவே இருந்தாலும் அவர் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் நூறு
சதவிகிதம் காலத்தால் மாறாமல்,
மாற்றப்படாமல்,
முரண்படாமல் தவறு என்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லாமல் இருந்ததாக
வரலாறு இல்லை. எப்பேர்ப்பட்ட பேரறிஞராக அவர் இருந்தாலும் அன்று அவர்
சொல்லும் கருத்தை சில வருடங்களுக்குப் பின்னர் வருபவர்கள் அவரைவிட
சிறப்பான முறையில் ஆய்வு செய்து தெரிவிப்பதைப் பார்க்கிறோம். அல்லது முன்
சென்ற அவ்வறிஞரின் கூற்றை தவறு என்று நிரூபிப்பதைப் பார்க்கிறோம்.
சான்று
1 –
குர்ஆனில் முரண்பாடுகளில்லை.
முஹம்மது (ஸல்) அவர்கள் எதை இறை செய்தி என்று சொன்னார்களோ அந்த குர்ஆனில்,
முரண்பாடுகள் உள்ளது என்றோ அல்லது தவறு நிறைந்துள்ளது என்றோ இது வரை
எவராலும் நிரூபிக்க முடியவில்லை. பொய்யர் என்று அடிப்படையில்லாமல்
கூறியவர்கள் குர்ஆனை பொய் என்று நிரூபித்திட முடியவில்லை. குர்ஆனைப்
போன்ற ஒன்றை எவராலும் கொண்டுவர முடியாது என்ற குர்ஆனின் சாவல்
1400
ஆண்டுகாலம் ஆகிவிட்ட நிலையிலும் முறியடிக்கப்பட முடியாமல் இன்னும்
நிலுவையிலேயே உள்ளது. இதைத்தான் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
அவர்கள் இந்த குர்ஆனை கவனமாக சிந்திக்க வேண்டாமா,
இது அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால்,
இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
(திருக்குர்ஆன்
4 : 82)
இதை நம் தூதராகிய அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள்
கூறுகின்றார்களா? (நபியே!)
நீர் கூறும்;
''நீங்கள்
உங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால்,
இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்;
அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய)
அழைத்துக் கொள்ளுங்கள்!''
என்று.
(திருக்குர்ஆன் 10 : 38)
சான்று
2 –
அபூலஹபைப் பற்றி திருக்குர்ஆன்.
மக்கா நகர் நிராகரிபாளர்களில் ஒருவனான அபூலஹப் இஸ்லாத்தை எதிர்ப்பதில்
முன்னனியில் இருந்தான். இவனுக்கு நரகம் தான் பரிசாகும் என்று
திருக்குர்ஆன் கூறுகிறது.
'அபூலஹபின்
இரண்டு கைகளும் நாசமடைக,
அவனும் நாசமாகட்டும். அவனுடைய பொருளும்,
அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
(திருக்குர்ஆன்
111: 1,2)'
என்றும் கூறுகிறது.
அபூலஹப் உயிரோடு இருக்கும் போது இறங்கிய வசனங்களாகும் இது. இதே அபூலஹப்
நினைத்திருந்தால் என்னைப் பற்றி முஹம்மது பொய் சொல்கிறார் என்று ஒரு
வெளித்தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலாவது
'நான்
முஸ்லிமாகிவிட்டேன்'
என்று அறிவித்திருக்கலாம். அவன் முஸ்லிம் என்று அறிவித்திருந்தாலே
அவனைப்பற்றி கூறும் இவ்வசனங்களை முஹம்மது (ஸல்) அவர்கள் கற்பனையாக
கூறியுள்ளார் என்று நிரூபணமாகியிருக்கும். அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையாளர் என்பதற்கும்,
அவர்கள் இறைவனிடத்திலிருந்து பெற்றுத்தந்த இக்குர்ஆன் உண்மைதான்
என்பதற்கும் இவ்வசனங்களும் சாட்சி பகர்கின்றன.
சான்று
3 –
பிர்அவ்ன் உடலை பாதுகாப்போம் என்று கூறும் திருக்குர்ஆன்.
நபி மூஸா (அலை) அவர்களை எதிர்த்து அவர்களைப் பொய்ப்படுத்த முயன்ற
பிர்அவ்னை கடுமையாகத் தண்டித்தான் இறைவன். பின்னர் அவனிடம் கூறப்பட்ட
செய்தியை இறைவன் பின்வருமாறு திருக்குர்ஆனில் கூறுகிறான்.
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம்
நாம் உம் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம்
அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்''
என்று அவனிடம் கூறப்பட்டது.
(திருக்குர்ஆன்
10: 92).
இன்றுவரை பிர்அவ்ன் என்ற இரண்டாம் ரம்ஈஸஸின் உடல் கண்டெடுக்கப்பட்டு
கெய்ரோ அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் பட்டுள்ளது. பிர்அவ்னின் உடலைப்
பாதுகாப்போம் என்று இறைவன் அறிவிப்பதாக முஹம்மது (ஸல்) அவர்கள் உண்மையே
சொன்னார்கள் என்பதற்கு நம் கண்களுக்கு முன்னால் இருக்கும் இதைவிட வேறு
என்ன ஆதாரம் தேவை?
சான்று
4 –
குர்ஆன் கூறும் இந்நூற்றாண்டின் அறிவியல் உண்மைகள்.
விண்ணியல்,
மண்ணியல்,
கருவியல்,
கடலியல் என்று இந்நவீன நூற்றாண்டின் அனைத்து இயல்களைப் பற்றியும் பல அறிய
விஷயங்களை முஹம்மது (ஸல்) அவர்கள் இறைசெய்தியாகத் தெரிவித்தார்கள்.
அத்தகைய இறைச் செய்திகளாகிய திருமறை குர்ஆன் வின்வெளிக்கு மனிதன்
செல்லலாம் ஆனால் அதற்குத் தேவைப்படும் சக்தியோடு செல்ல வேண்டும் என்று
கூறுகிறது. விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்கும் என்றும் சொல்கிறது.
இப்பிரபஞ்சம் ஒரே பொருளாக இருந்து பின்னர் வெடித்துச் சிதறி பல கோள்கள்
உண்டாகியது என்ற பெருவெடிப்புக் கொள்கையைப் பற்றிப் பேசுகிறது. சூரியனும்
மற்ற கோள்களும் அவைகளுக்காக வரையறுக்கப்பட்ட பாதைகளில் நீந்துகின்றன
ஓடுகின்றன என்கிறது இக்குர்ஆன். இவ்வாறு குர்ஆன் கூறும் இந்நூற்றாண்டின்
அறிவியல் உண்மைகள் அனைத்தும் இக்குர்ஆன் இறைவேதமே என்பதை பறைசாற்றுகிறது.
இக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்துள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் உண்மையையே சொல்லியிருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியம்
கூறுகின்றன.
அறிவியலின் வாடையைக் கூட நுகரமுடியாத அக்காலத்தில் எந்த மனிதனாலும் இந்த
அளவிற்கு கற்பனை செய்ய இயலுமா?
முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதராக இல்லாமல் நம்மைப் போன்ற சாதாரண
மனிதராக மட்டும் இருந்திருந்தால் இவைகளைப் பற்றி சிந்தித்திருக்கவே
முடியாது. முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு மாபெரும் உண்மையாளர் என்பதை
குன்றிலிட்ட தீபம் போல விளங்க வைக்கும் அவ்விறைவசனங்கள் இதோ
மனு,
ஜின் கூட்டத்தார்களே! வானங்கள்,
பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின்,
(அவ்வாறே)
செல்லுங்கள். ஆனால், (வல்லமையும்
நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
(திருக்குர்ஆன்
55 : 33)
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை
ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க
நாடுகிறானோ,
அவருடைய நெஞ்சை,
வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் -
இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
(திருக்குர்ஆன்
6 : 125)
நிச்சயமாக வானங்களும்,
பூமியும் முதலில் இணைந்திருந்தன என்பதையும்,
இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும்,
உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும்
காஃபிர்கள் பார்க்கவில்லையா?
இவற்றைப் பார்த்தும் அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
(திருக்குர்ஆன்
21 : 30)
''நிச்சயமாக
அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்;
பகலை இரவில் புகுத்துகிறான்;
இன்னும் சூரியனையும்,
சந்திரனையும் வசப்படுத்தினான்''
என்பதை நீர் பார்க்கவில்லையா?
ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன அன்றியும் நிச்சயமாக
அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்.
(திருக்குர்ஆன்
31 : 29)
சான்று
5 –
பூமியைப் பற்றி திருக்குர்ஆன்
பூமியின் வடிவத்தையும் அதற்கு இருக்கும் ஈர்ப்பு சக்தி என்று ஒன்று
இருப்பதையும் தெளிவாக தெரிவிக்கிறது இக்குர்ஆன். வானத்திற்கும்
பூமிக்கும் உள்ள ஈர்ப்பு சக்தியையும் விட்டு வைக்கவில்லை இந்தக் குர்ஆன்.
பூமியில்தான் நாம் வாழமுடியும் என்கிறது குர்ஆன். இப்படி அடுக்கடுக்கான
அறிவியல் உண்மைகளை இறைவன் அறிவிப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அந்த அறிவியல் உண்மைகளுக்கு மாற்றமாக பொய்கள் எங்கே
இருக்கிறது?
இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே,
இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
(திருக்குர்ஆன் 55
: 17)
அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும்
பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல்
மலைகளை உறுதியாக நிறுத்தினான்;
மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்;
இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான,
வகை வகையான (மரம்,
செடி,
கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்.
(திருக்குர்ஆன்
31 : 10)
நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக
அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்;
அவை இரண்டும் விலகுமாயின்,
அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது.
நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்;
மிக மன்னிப்வன்.
(திருக்குர்ஆன்
35:41)
(அதற்கு
இறைவன்,
''இதிலிருந்து)
நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப்
பகைவராயிருப்பீர்கள்;
உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட)
காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு''
என்று கூறினான்.
(திருக்குர்ஆன்
7:24)
''அங்கேயே
நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்;
அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்;
(இறுதியாக)
நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்''
என்றும் கூறினான்.
(திருக்குர்ஆன்
7:25)
இவ்வாறு முழுக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் உண்மையான இறைத்தூதர்
என்பதற்கும் அவர்கள் உண்மையாளர் என்பதற்கும் ஆதாரமாக இருக்கிறது.
இப்பதிலின் சுருக்கம் கருதி அதிலிருந்து ஐந்து தலைப்புகனை மட்டும்
ஆதாரமாக இங்கு வைத்துள்ளோம். அனைத்து ஆதாரங்களையும் தொகுத்து எழுதத்
துவங்கினால் பல பாகங்களில் புத்தகங்களாகத்தான் வெளியிடவேண்டிவரும்.
சாட்டையடிகள் மேலும் தொடரும் இன்ஷா அல்லாஹ்...
|